அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் அவர்களிற்கு பாதுகாப்பை வழங்கியேனேம் வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டுமே அன்றி அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றுவது தீர்வாகாது என்பதனை சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நானாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
அனுராதபுரம் சிறையில் 3 அரசியல் கைதிகள் தொடர்ந்தும் 11 நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகள் கோருவது உடனடி விடுதலையல்ல . தமக்கான வழக்கினை தமக்கும் புரியும் மொழி பாவனையில் உள்ளது தம்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிகழ்ந்த்தாக கூறப்படும் பிரதேசத்திற்கான நீதிமன்றில் குறித்த வழக்கினை நடாத்துமாறே கோருகின்றனர். என்பதனை சுட்டிக்காட்டியுள்ளேன்
இருப்பினும் இதற்கு சட்டமா அதிபர் சாதகமான பதிலினை வழங்கவில்லை. மாறாக வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் இருப்பதனால் அவ்வாறு மேற்கொள்ள முடியாது என்றே பதிலளித்தார். இதற்கு மாற்று யோசனையாக அச்சுறுத்தல் எனில் சாட்சிகளிற்கு பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும். மாறாக அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றுவது தீர்வாகாது என்தனையும் தெரிவித்துள்ளேன்.
இவற்றிற்கான சாதகமான பதில் கிடைக்காதமையினால் இன்றைய தினம் இக் கைதிகளிற்காக இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது. என்றார்.