யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

1102 0
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தழிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது
குறித்த மூன்று அரசியல் கைதிகளின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது
அத்துடன் சிறைச்சாலைகளில் உள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் இங்கு  வலியுறுத்தப்பட்டது
அத்துடன் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கைவிரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் இங்கே இடம்பெற்றதுடன் யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் அடையாள நடைபவனியும் மேற்கொள்ளப்பட்டது
ஈ.பி.ஆர்.எல்.எப்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக நீதிக்கான வெகுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இதில் கலந்து கொண்டதுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் அரசியல் தலைவர்கள் ,மதகுருமார்கள் பொது அமைப்புகள் உள்ளிட்ட பெரும் திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.