இபலோகம சம்பவம் – இன்றும் 40 பேர் கைது

392 0

கடந்த 29 ஆம் திகதி இபலோகம பொலிஸ் பிரிவில் கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்தார்.

கெப் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் கெக்கிராவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சாரதிக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுதினம் 30 ஆம் திகதி பிற்பகல் தொடக்கம் இரவு வரை கெக்கிராவை – தலாவை பிரதான வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற 2 ஆம் திகதியும் பிரதேசவாசிகள் வீதிக்கு குறுக்கான குழுமியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 66 பேர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 8 பேர் நாளைவரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கெக்கிராவை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 40 பேர் இன்று இபலோகம பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று கெக்கிராவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment