தீபாவளி திருநாளை முன்னிட்டு மலையக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச தமிழ் ஊழியர்களுக்கும் இம்மாத சம்பளத்தை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இரத்தினபுரி மாவ ட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு வழமையாக 20 ஆம் திகதியும் அரச ஊழியர்களுக்கு வழமையாக 25ஆம் திகதியும் சம்பளம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 18ஆம் திகதி தீபாவளி வருகின்ற காரணத்தால் இம்மாதம் மட்டும் சம்பளத்தை முன்கூட்டி வழங்குமாறு கோரி க்கை விடுக்கப்படுகிறது.
அரச தமிழ் பணியாளர்களுக்கு 18ஆம் திகதிக்கு முன்னர் சம்பளத்தை பெற்றுக் கொடுக்கும் விடயம் குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தலைவர் கள், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்குமாறும் இரத்தினபுரி மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியா ளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.