நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரை நாளை ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நாமல் நாளை விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் தான் இன்றே வாக்கு மூலம் வழங்க போவதாக தெரிவித்தே இன்று ஹம்பாந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார்.