வருகிற 30-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு 22 அரசியல் கட்சிகள் அதரவு அளித்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் கூறினார்.தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.கூட்ட முடிவில் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவிரி பிரச்சனை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்துக்குரிய தண்ணீரை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி முழு கடையடைப்பு போராட்டம், சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.
இந்த போராட்டத்தை தீவிரமாக நடத்துவது குறித்து திட்டமிடுவதற்கான ஆலோசனை கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (23-ந்தேதி) நடக்கிறது.
இக்கூட்டத்தில் 100-க்கும் அதிகமான விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா பங்கேற்கும் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதை வரவேற்கிறோம்.
இது போல் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் பங்கேற்கும் என எதிர் பார்க்கிறோம். இதுவரை தி.மு.க. உள்பட 22 அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.