மத்திய அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட வரியை ஊவா மாகாண சபை அறவிட முனைவதாக குற்றச்சாட்டு

315 0

மத்திய அரசாங்கத்தினால் நீக்கப்பட்;ட வருமான வரியை மீண்டும் அறவிட ஊவா மாகாண சபையின் அதிகாரிகள் தயாராவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

2010ஆம் ஆண்டு நெவம்பர் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தின் பாதீட்டு அறிவிப்பின் ஊடாக இந்த வரி நீக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment