நல்லாட்சியை 2020வரையில் ஜனாதிபதியாலும் கலைக்க முடியாது

226 0

அரசாங்கத்தில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்புமாறு எதிர்கட்சியின் சிலர் தெரிவிக்கும் கருத்து யதார்த்தததிற்கு புரம்பானதென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியிடம் பொறுப்பளிக்கப்பட்டு மூன்று மாதங்களும் நிறைவடையாத நிலையில், அதன் செயற்பாடுகளில் குளறுபடிகளை ஏற்படுத்தினர்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்குமாறு கூறுகின்றனர்.

அவர்கள் கூறுவதை போன்று செயற்பட முடியாது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கும் அதிகாரமில்லை.

அத்தகைய சூழலில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு கோருவது நியாயமற்றதென அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment