சர்வதேச குற்றச்செயல்களுக்கு உதவி புரிந்த இரண்டு பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்வான் வங்கி ஒன்றின் கணினி தரவுகளை முடக்கி பல மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு இவர்வர்கள் உதவி புரிந்தாக காவல்துறையினர் குறிப்பிடடுள்ளனர்.
இலங்கையில் வங்கி ஒன்றில் கிளையில் அவர்கள் பணத்தை மீளபெறும் போது இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஏஎப்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்வான் வங்கி கணினி கடந்த வாரம் ஹெக் செய்யப்பட்டதை அடுத்து, அதுதொடர்பில் தாய்வான் காவல்துறை இலங்கையின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துடன் நெருங்கி செயற்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.