வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமது அமைச்சானது வெறும் பெயரளவில் மாத்திரமே உள்ளதாகவும், அமைச்சிற்கான ஆளணி பற்றாக்குறைகளும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.