விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக தமது ஓய்வு காலத்தை பயன்படுத்த முன்னாள் ஜனாதிபதிகள் முன்வர வேண்டும் என சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் தமது பதவிக் காலத்தின் பின்னர் விவசாய பணிகளை மேற்கொண்டனர்.
இதன்மூலம் நாட்டின் விவசாயத்துறைக்கு பெரும்பணியாற்றினர்.
இவ்வாறு இலங்கையின் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு இலங்கையின் முன்னைய தலைவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.