அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 

219 0

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுதி திட்டம் தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்;ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு அமைய அடுத்த வருடத்திற்கான செலவு 3ஆயிரத்து 982 பில்லியனாகவும், வருவாய்  2ஆயிரத்து 175 பில்லியனாகவும் அமைந்துள்ளது.

இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆயிரத்து 807 பில்லியன் ரூபாய் துண்டுவிழும் தொகையாக அமைந்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், வரவு  2 ஆயிரத்து 98 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததுடன், செலவு 2 ஆயிரத்து, 723 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

இந்தநிலையில், முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Leave a comment