பேரூந்தில் மாட்டிறைச்சி கடத்திய மூவர் கைது

340 0

பருத்தித்துறையிலிருந்து வவுனியாவிற்கு தனியார் பேரூந்தில் மாட்டிறைச்சி கடத்திய சாரதி உட்பட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்துவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிஸார் பேரூந்தினை சோதனையிட்ட போது பேரூந்தின் பயணிகள் பொதிகள் வைக்கும் பெட்டகத்திலிருந்து சுமார் 87 கிலோ 850 கிராம் மாட்டிறச்சி இரண்டு பைகளில்  சட்டவிரோதமாக வைத்திருத்தமை உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து உடனடியாக பேரூந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் 21,27,35 வயதுடைய மூவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment