வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வராவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (09) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.