பஷிலுக்கு மனோ பகிரங்க சவால்

357 0

கல்பிட்டியிலுள்ள பல தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தாகவும், முடியுமானால் இது பொய்யானது என்பதை பஷில் ராஜபக்ஷ நிரூபிக்கட்டும் என அமைச்சர் மனோ கணேசன் இன்று (08) பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் நாட்டின் நிலப் பரப்பு மட்டுமன்றி, கடல் பரப்பையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த அரசாங்கம் பட்ட கடனை அடைப்பதற்கு வெளிநாடுகளுக்கு குத்தகைக்கே இந்த அரசாங்கம் வழங்கியது. இந்த அரசாங்கம் அரச சொத்துக்களில் ஒரு அங்குலத்தைக் கூட வெளிநாட்டுக்கு விற்பனை செய்யாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment