மத்துகமை – கலவான வீதியில் மிதலன பிரதேசத்தில் வேன் ஒன்றும், ஜீப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (8) இடம்பெற்ற விபத்தில் வேனில் பயணித்த 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து பதுரலிய மற்றும் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பதுரலிய காவல்துறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (9) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.