தாய்வானில் உள்ள ஃபா – ஈஸ்டன் எனும் சர்வதேச வங்கியில் இருந்து கொள்ளையிடப்பட்ட ஒருதொகை பணம் இலங்கையில் உள்ள வங்கிகளிலும் வைப்பில் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்தேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தாய்வான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து தாய்வானில் உள்ள குறித்த வங்கியின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தாய்வான் பிரதமர் விலியம் லாய் அரச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த வங்கியை முடக்கி கோடிக்கணக்கான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணம், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.