தமது கட்சி தனித்து போட்டியிடும் – கருணா அம்மான்

32055 0

தமது கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி மத்திய குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய வடக்கு, கிழக்கு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தமது கட்சி தனித்து போட்டியிடும்.

ஓரு போதும் சிங்கள கட்சிகளுடன் கூட்டுச்சேராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment