இலங்கை அகதியொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

321 0

இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர் சுவிஸ்சலாந்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகினார்.

ரிசினோ கன்றன் அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர் ஏனைய சில அகதிகளை அச்சுறுத்தி கூரிய ஆயுதம் மூலம் தாக்க முற்பட்டபோதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ‘ஆர்இரி.ரி.வி. நொவஸ்ரி’ செய்தி வெளியிட்டுள்ளது.

அகதியின் அச்சுறுத்தல் தொடர்பில் சுவிஸ் காவல்துறைனர், முகாமிற்கு வரவழைக்கப்பட்டனர்.

ஏனைய அகதிகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும்இ இந்த சம்பவம் தொடர்பாக சுவிஸ்சலாந்து வழக்கு தொடுனர் செயலகத்தினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அகதி முகாமில் பல இலங்கை அகதிகள் பல வருடங்களாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment