போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

289 0

நிவிதிகல – பெபோட்டுவ – உடகரவிட்ட பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்றில் போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள், களுத்துறை மற்றும் தெஹிவளை பிரதேசங்களை சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரும், 43 வயதான ஆண் ஒருவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

விற்பனை நிலையத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு அளித்த தகவலுக்கு அமைய உடனடியாக செயல்பட்ட காவல்துறை அவர்கள் பயணித்த வேனை பின் தொடர்ந்துள்ளனர்.

பின்னர் கலவானை நகரில் வைத்து வேனை பரிசோதனை செய்த போது சந்தேக நபர்களிடமிருந்து போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 18 மற்றும் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் இரண்டும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment