கலன்பிந்துனுவௌ காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உந்துருளியில் பயணித்த மூன்று பேரிடமிருந்த துப்பாகி மற்றும் இரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நாட்டில் பெயர் போன குற்றவாளிகள் இருவர் உள்ளடங்கியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் ஏதொவொரு குற்றச் செயலை மேற்கொள்வதற்காக சென்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பிச் சென்ற நபரை கைது செய்வதற்காக காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.