கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

354 0

கேரளா கஞ்சா தொகையினை கைவசம் வைத்திருந்த சமூர்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண பிரதி காவற்துறை காரியாலயத்திற்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவரது மகனிடம் இருந்து 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கஞ்சா தொகைகளின் பெறுமதி 2 லட்சம் ரூபாய் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment