நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உடநுவர – வெலிகந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட்டே தீர்மானிக்கப்படும்.
தற்போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நீர் கட்டணத்தையும் அதிகரிப்பது பொறுத்தமானது அல்லவென அரசாங்கம் கருதுகிறது.
எனவே அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பாட்டாளும் தற்போதைக்கு நீர் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.