ஹட்டனில் 2 ஆயிரத்து 500 காணிகளுக்கான உறுதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் ஹட்டனில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா – ப்ரவுன் ஸ்றீட் எமளினா பிரிவில் இன்று 18 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இதுவரையில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ள அதேநேரம் எதிர்வரும் காலங்களில் கட்டப்படவுள்ள வீடுகளுக்கும் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்தார்.