நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக தென்மேற்கு பிரதேசங்களில் வாழ் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
இரத்தினப்புரி மாவட்டம் மற்றும் தென் மாகாணங்களில் பல பிரதேசங்களில் அதிக மழையுடனான காலநிலை நிவுகின்றது.
இதனிடையே அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு 117 என்ற தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் சபரகமுவ மத்திய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.