கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை கடத்த முயற்சித்த 5 சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம் வலான குற்றத் தடுப்பு பிரிவினர் என தெரிவித்து, குறித்த மருத்துவரை சந்தேகநபர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை மேலும் தெரிவித்தது.
மருத்துவரை கடத்தி அவரிடம் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட இவர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்ட காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.