வெடிபொருள் அகற்றல் செயல்பாடு மிகவும் மந்தகதியில்!

2314 0

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இடம்பெறும் வெடிபொருள் அகற்றல் செயல்பாடானது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதனால் அதனை விரைவு படுத்த பிரித்தானியா உதவி புரியவேண்டும் என பிரித்தானிய ஆசிய பசுபிக் விவகார அமைச்சர் பீல்ட் மார்க்கிடம் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் கோரிக்கை விடுத்தார்.

வடக்கிற்கு வருகை தந்த பிரித்தானியாவிற்கான ஆசிய பசுபிக் விவகார அமைச்சர் மற்றும் இலங்கைக்காகன பிரித்தானியத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முகமாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அதன்போது மாவட்டச் செயலாளர் மற்றும் அப்பகுதி நில உரிமையாளர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின்போதே மாவட்டச் செயலாளர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார். இதன்போது மாவட்டச் செயலாளர் மேலும் கோருகையில் ,

கிளிநொச்சி மாவட்டத்தின்  முகமாலையை அண்டிய  பகுதியில் அதகளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கே இடம்பெறும் வெடிபொருள் அகற்றல் செயல்பாடானது மிகவும் குறைந்த ஆளணியுடன் ஓர் இரு தொண்டு நிறுவனங்களின் மூலமே  மிகவும் மந்த கதியில்  அப் படிகள் இடம்பெறுவதனால் இப்பகுதி நில உரிமையாளர்கள் இன்றுவரை மீளக்குடியமர முடியவில்லை.

இதன் காரணமாக வெடிபொருள் அகற்றும் பணிகளை  விரைவு படுத்தினாலே இம் மக்களை சொந்த இடத்தில் குடியமர்த்த முடியும். எனவே அப்படிகளை விரைவு படுத்த பிரித்தானியா உதவி புரியவேண்டும். ஏனெனில் இன்றுவரை பிற்றது நிலங்களில் மழை , வெய்யில் என இந்த நிலத்தின் உரிமையாளர்கள் வறுமையின் மத்தியில் வாழ்வதோடு நோய் நொடிகளிற்கும் உள்ளாகின்றனர். இதனால்  அவ்வாறு வாழும் மக்களின் இயல்பு வாழ்விற்காக வெடிபொருள் அகற்றல் பணியை  விரைவு படுத்துவதன் மூலம் தீர்வினை எட்ட முடியும் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் அவ்வாறான பணிகள் , தேவைகளை நேரில் பார்வையிடுவதோடு அது தொடர்பில் ஆராய்வது எமது கடமை அதற்காக இவ்விடம் வந்துள்ளோம்.்எனப் பதிலளித்ததோடு நில உரிமையாளர்களிடம் தற்போதைய வாழ்வாதாரம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.-

Leave a comment