மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி!

371 0
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வீட்டில் வேலி அடைக்கப் பயன்படுத்திய தகரம் மின் வயரை அறுத்துச் சென்றநிலையில் அவ் வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் தாவடி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த 54வயதையுடை சிவசுப்பிரமணியம் – உதயகுமார்  என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
தாவடி தெற்கு  பகுதியில் உள்ள குறித்த வீட்டின் அருகே இருந்த  வேலி ஒன்றினை  அடைப்பதற்காக தகரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தகரம் பயன்படுத்தி அடைக்கப்பட்ட வேலியருகே
மின் வயர் சென்றுள்ளது. அவ்வாறு சென்ற வயரினை குறித்த தகரம்  அறுத்துச் சென்றநிலையில் தகரத்தினை ஏந்தி நின்ற அவ் வீட்டின் உரிமையாளர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன் காரணமாகவே குறித்த வீட்டின் உரிமையாளர் இவ்வாறு  பரிதாபகரமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் – பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a comment