முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் மேற்ப்பார்வையின் கீழ் பிளான் இன்றர் நெஷனல் சிறிலங்கா நிறுவனத்தின்11044633ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டட தொகுதியும் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையும் நேற்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கபப்ட்டுள்ளது.
பாடசாலை அதிபர் திரு இ பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டத்தை தொடர்ந்து வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ இரவீந்திரன் அவர்கள் சரஸ்வதியின் திருவுருவச்சிலையை திரைநீக்கம் செய்து மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதிக்கு மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து கட்டடத்துக்கான நிதியினை வழங்கிய ஜெர்மனியை சேர்ந்த திரு இயன்கரன் அவர்களால் கட்டிடம் நாட வெட்டி திறந்து வைக்கப்பட்டது இதனைத்தொடந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.