பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபுர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பொதுநலவாய விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இத்தீப்பந்தம் இலங்கையில் வைக்கப்படவுள்ளது.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வருகைதந்துள்ள பிரதிநிதிகள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து இது குறித்து அறிவித்துள்ளனர்.
அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா ஏற்பாடுகளை திட்டமிடுவதற்காக நிறைவேற்றுக் குழு இலங்கையில் ஒன்றுகூடியது. கடந்த 04ஆம் திகதி முதல் நேற்று 06ஆம் திகதி வரை பொதுநலவாய விளையாட்டு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.