மஹிந்த குழு கூறுவதை மட்டும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது- மஹிந்த

286 0

நாட்டிலுள்ள ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களைக் கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு பக்கத்தாரை மட்டும் சாராமல் உண்மையைத் தேடி வெளியிட முற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மஹிந்த குழுவினர் கூறுவது போன்று மத்தளை விமான நிலையத்தை விற்பனை செய்ய ஒரு அமைச்சரவைப் பத்திரத்தையாவது இதுவரை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை.

ஹம்பாந்தோட்டயில் எந்தவொரு அரச சொத்தையும் நாம் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய மாட்டோம். ஜனாதிபதி அதற்கு இடமளிக்கப் போவதுமில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment