யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடாத்திய மருத்துவ முகாமில், புனர்வாழ்வு பெற்று விடுதலையான சில முன்னாள் புலி உறுப்பினர்களின் இரத்த மாதிரிகளை விமானப்படை மருத்துவர்கள் சேகரித்துள்ளதாக தமக்கு தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி சன்ன ஜெயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
எந்தவொரு இலங்கைக் குடிமக்களிடமிருந்தும் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சேமிக்கும்போது சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை அனுமதி பெறப்படவேண்டுமென்றும், அவ்வாறு அனுமதி பெறப்பட்டதா? எனவும் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிகிச்சைக்கு அப்பாற்பட்ட தேவைக்காக தனிமனிதரிடமிருந்து இரத்த மாதிரிகளைப் பெறும்போது அதற்கு உரிய அனுமதி பெறப்படவேண்டும்.
இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா என்று சிறிலங்கா மருத்துவச் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றிடம் அறிந்து கொள்ள விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.