9 மாதங்களில் 600 முறை பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

7885 0

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் நடப்பாண்டில் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 600 முறை எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் நடப்பாண்டில் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 600 முறை எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவானது பாகிஸ்தான் உடன் சுமார் 33 ஆயிரம் கி.மீ அளவுக்கு சர்வதேச எல்லையை கொண்டுள்ளது. இதில், காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 221 கி.மீ சர்வதேச எல்லை மற்றும் 740 கி.மீ அளவுக்கான எல்லை கட்டுப்பாடு கோடு உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாத இறுதி வரை 600-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் ரக குண்டுகள் மூலம் இந்திய பகுதிகளை தாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலில் 8 பொதுமக்கள் மற்றும் 16 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டில் 450 முறை பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்கியதாகவும், அதில் 18 பொதுமக்கள் மற்றும் அதிகமான அளவு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment