அநுராதபுரதம் சிறைச்சாலையில் 11வது நாளாக தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது
வடக்கு மாகாண சபையின் 107வது அமர்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்க மாகாண சபை கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உண்வு தவிர்ப்பு போராட்டத்தை 11வது நாளாக முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்மொழிந்து உரையாற்றினார்.
வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுவரும் தமது வழக்குகளை அனுராதபுரம் சிறப்பு நீதமன்றத்திற்கு மாற்றுவதையும், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தம்மை தடுத்து வைப்பதை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் கடந்த பத்து நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரகின்றனர்.
குறித்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உடநிலை தற்போது மோhசமடைந்து வரும்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்
இவ்விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் உணவு தவிர்;ப்பு போராட்டத்தை நிறைவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து அவைத்தலைவர் குறித்த பிரேரணையை முன்மொழிந்தார்.