உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேவையான தொகுதி ரீதியான வாக்குச்சாவடிகள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நடத்தப்படும் பயிற்சி செயலமர்வுகளை விரைவில் ஆரம்பிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான செயலமர்வொன்று இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது