‘விளைச்சல் பெருகிட – ஒருமித்து எழுவோம்’ என்ற தேசிய உணவு உற்பத்தி புரட்சி திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
கெக்கிராவ – திப்பட்டுவௌயில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் பல அமைச்சர்கள் கலந்து கொண்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.