முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை இரத்துச்செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதியன்று தாக்கல் செய்த மனுவுக்கு இடையீட்டு மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்றும் அந்தத் திருத்தத்தை உடனடியாக இரத்துச்செய்யுமாறும் கூறியே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இன்று குறித்த இடையீட்டு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்துள்ளார்.