கின்னஸ் சாதனை திருமணம் : எந்தவித நடவடிக்கையும் இல்லை

3930 0

உலகின் மிக நீளமான திருமணச் சேலை அணிந்து கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மணமகளின் சேலையினை பற்றிப் பிடிக்க சுமார் 250 மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இது ஒரு முறையற்ற முன்னுதாரணம் எனவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வியை புகட்டுவதற்கான செயற்பாடுகள் மற்றும் கல்வி சம்பந்தமான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த அதிபருக்கு அனுமதி இருந்தாலும் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த எந்தவித அனுமதியும் இல்லை என அச்சங்கத்தின் தலைவர் மொஹான் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு மேலதிகமாக ஒருசில அதிபர்களுக்கு பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அனைவருக்கும் ஒரே முறைமையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அதிபர் சேவைக்கு மற்றும் அரச சேவைக்கு பிழையான முன்னுதாரணம் என அதிபர்கள் சங்கத்தின் தலைவர் மொஹான் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment