சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண சபையினர் நாளை சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு இன்று நடைபெற்ற போது அரசியல் கைதிகள் விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நாளை சிறைச்சாலைகளுக்கு செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் தலைமையிலான குழுவின் நாளை சிறைச்சாலைகளுக்குச் சென்று சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதன் போது கைதிகளின் விடயத்தில் ஐனாதிபதி பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி அதனை உடனடியாக. ஐனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளமை குறித்து மாகாண சபை எடுத்துக் கூற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஆகவே உடல்நிலையைக் கருத்திற்கொண்டு உண்ணாவிரத்த்தை நிறுத்த வேண்டுமென கோர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.