போலியான தகவல்கள் வழங்கிய இலங்கை மாணவர்கள்

305 0

201608201442568086_acharapakkam-school-study-55-srilanka-student-removal_SECVPFபோலியான தகவல்களை வழங்கி தென்னிந்திய அச்சரப்பாக்கம் பாடசாலைகளில் இணைய முற்பட்ட 55 இலங்கை மாணவர்கள் குறித்து அந்த மாவட்டத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
11 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட இந்த மாணவர்கள் தாங்கல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகள் என தெரிவித்து அச்சரப்பாக்கம் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் அனுமதியினை கோரியிருந்தனர்.
இவர்களில் 21 மாணவிகள் உள்ளடங்குவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் சிறுவர் நலன்புரி குறித்த சபை அதிகாரிகள் இவர்கள் வசமிருந்த ஆவணங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆவணங்கள் உரிய முறையில் இல்லாதபோதிலும் மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு கல்வி கற்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இவர்களின் கல்வியை தொடர்வதற்கு குந்தகம் ஏற்படாத வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடவடிக்கைகளினை எடுக்க அதிகாரிகள் முனைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.