ரயில்வே திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மேற்பார்வை முகாமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திலிருந்து பயாகல ரயில் நிலையம் வரையில் நிர்மாணிக்கப்படும்
இரட்டை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதனை முன்னிட்டே ரயில்வே திணைக்களத்திற்கு 50 இற்கும் அதிகமான மேற்பார்வை முகாமையாளர்கள் மற்றும் சாரதிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையார் எஸ்.எம். அபேயவிக்ரம தெரிவித்துள்ளார்.