பதுரலிய லத்பதுர பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது பொலிஸார், தீயணைப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த தீயினால் வியாபார நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அங்குலானை தேரவல வீதியில் உள்ள நிறப்பூச்சு தயாரிப்பு நிலையம் ஒன்றில் இன்று காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது