திஸ்ஸமஹாராம பெரளிஹெல பகுதியில் தொல்லியல் பெறுமதிமிக்க இடமொன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்களுடன் அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.