கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு கூரிய ஆயுதத்துடன் நுழைய முயற்சித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது குறித்த நபரை 20ம் திகதி வரை விளக்குமரியலில் வைக்குமாறும், சிறைச்சாலை அதிகாரிகளின் ஊடாக அங்கொட மனநோய் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த சந்தேக நபர் கடந்த 21ம் திகதி முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரிய போது அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்ததை தொடர்ந்து தம்மிடம் இருந்த கூறிய ஆயுதத்தை எடுத்து தாம் தற்கொலை செய்வதாக மிரட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது