கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டிற்கு முன்னால் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.
வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்த வாத்துவை பகுதியை சேர்ந்த ப்ரகீத் சாணக குணதிலக என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு சரணடைந்துள்ளதாகவும் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து இன்று மாலை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.