தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக இந்து கலாசார திணைக் களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு நேற்று வருகை தந்த அமைச்சரிடம் அனுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போரா ட்ட விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
73 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மேல் நீதிமன்றில் உள்ளன. அவர்களுக்கான சோதனைப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குறித்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
விரைவான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். என்னால் முடிந்த வரையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். சட்டத்தினை நாங்கள் மீறி நடக்க முடியாது. ஆனால் அவற்றினை சுலபமாக விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றார்.
கேள்வி: இதன்போது வடக்கில் உள்ள வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில்?
பதில்: அவ்வாறு நடவடிக்கை எடுத்ததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. அது தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன்.அது எனது அமைச்சிற்குரியது இல்லை.சட்டமா அதிபரின் கீழேயே உள்ளது. அவருடன் கலந்துரையாடி அதற்கு ஒரு முடிவினை எடுப்போம்.
கேள்வி: கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினை தொடர்பில் ?
பதில்: கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீண்டும் அதனை தொடங்கவேண்டாம். 178 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடுசெய்து அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் தான் அதனை எழுதிக்கொண்டுள்ளது. செய்ய
வேண்டிய வேலைத்திட்டங்கள் அனைத் தும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மேல் என்னால் எதுவும் கூறமுடியாது என்றார்.