மஹிந்த ராஜ­பக்ஷ குழந்தைப் பிள்­ளையா ? : துமிந்த திஸாநாயக்க

315 0

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை அழிக்க நினைக்­கின்றார். கட்­சியை பிள­வு­ப­டுத்­தினால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாய்ப்­புகள் அதிகம் என்­பதை தெரி­யாத  குழந்­தையா மஹிந்த என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக்க கேள்வி எழுப்­பினார். 

கட்­சியின் தலைவர் சுக­யீனம்  அடையும் போது கட்­சியும் சுக­யீனம் அடைய முடி­யாது  எனவும் அவர் குறிப்­பிட்டார். மிகிந்­தலை பிர­தே­சத்தில் நேற்று  இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் பிள­வுகள் உள்­ளன. இதை கூறு­வதில்  வெட்­கப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை. விரும்­பியோ விரும்­பா­மலோ நாம் இரு தரப்­பாக செயற்­பட்டு வரு­கின்றோம். ஆனாலும் தனிப்­பட்ட முரண்­பா­டு­களை  கார­ண­மாக வைத்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்த ஒரு­போதும் முயற்­சிக்­கக்­கூ­டாது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வ­ருக்கு வய­தான கார­ணத்­தினால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் வய­தாக முடி­யாது. கட்­சியின் தலைவர் சுக­யீனம்  அடையும் போது கட்­சியும்  சுக­யீனம் அடைய முடி­யாது.  மஹிந்த ராஜபக் ஷ இப்­போது வேறு கட்­சி­யொன்றை உரு­வாக்­கி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் இன்று அவர்­க­ளுக்கு ஒரு கட்சி உள்­ளது என்­பது பொய்­யல்ல. பொது­ஜன பெர­முன என்ற பெயரில் தாமரை மலர் சின்­னத்தில் அக் கட்சி இயங்கி வரு­கின்­றது அதில் மஹிந்த ராஜபக் ஷவின் புகைப்­ப­டமும் பதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடை­யி­லான போட்­டியில் மஹிந்த ராஜபக் ஷ தனித்து கள­மி­றங்கி எமது வாக்­கு­களை சூறை­யா­டிக்­கொண்டால் எப்­ப­டியும் நாம் தேர்­தலில் தோற்­பது உறு­தி­யா­கி­விடும். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முழு­மை­யான வாய்ப்­புகள் கிடைக்கும். ஆகவே மஹிந்த ராஜபக் ஷ பசில் ராஜபக் ஷ மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சிலரை தன்­பக்கம் இணைத்தால் இறு­தியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தோல்­வியை சந்­திக்கும் என்­பது மஹிந்த ராஜபக் ஷவிற்கு தெரி­யாத விடயம் அல்ல . அவ­ருக்கு கணக்கு தெரி­யாதா? அர­சியல் தெரி­யாத நபரா ? அவர் என்ன அர­சியல் தெரி­யாத குழந்­தைப்­பிள்­ளையா? அப்­படி இருந்தும் ஏன் மஹிந்த ராஜபக் ஷ இதனை செய்­கின்றார்.

மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது கோபம் இருக்­கலாம். தன்­னுடன் இருந்த செய­லாளர் தனக்கு போட்­டி­யாக கள­மி­றங்­கி­யது மட்­டு­மல்­லாது தேர்­தலில் தலைவர் தோற்று செய­லாளர் வெற்றி பெற்றார். இந்த வைராக்­கியம் அவ­ரிடம் இருக்­கலாம். அதற்­காக தன்­னுடன் இணைந்து செயற்­பட்ட நபர்­களை பழி­வாங்கும் எண்ணம் இருக்க முடி­யாது. ஆனால் அவர்­களை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக் ஷ முயற்­சி­கின்றார். கட்­சியை பழி­வாங்­கினால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கு­வ­தாக கரு­து­கின்றார். இது நிகரானதா? அவ்வாறு செயற்பட்டால் அவருடைய கோபம் தீருமா?  ஆகவே மஹிந்த ராஜபக் ஷவே சிந்திக்க வேண்டும். யாருடன் இணைந்து செல்வது என்ற தீர்மானத்தை மஹிந்தவும் அவரது தரப்புமே முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment