மீள் பரிசீலனைக்காக 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்

314 0

நேற்று முன் தினம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரினூடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் சந்தேகங்கள் இருப்பின் 24 மணிநேரமும் சேவையிலிருக்கும் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிவிக்க முடியும் என திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது.

மேலும் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை நேரடியாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து இன்றே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஏனைய பாடசாலைகளுக்குரிய பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment