கருக்கலைப்பு சட்டத்திருத்தங்களானது மதரீதியான நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

462 0

கருக்கலைப்பு தொடர்பான சட்டத்திருத்தங்களானது, மதரீதியான நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம இதனைத் தெரிவித்துள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் குறைபாடுகள் உடைய கரு உருவாக்கம் போன்ற காரணங்களுக்காக கருக்கலைப்பினை மேற்கொள்வது சட்டரீதியானதாக்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டவரைவுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது.

நாட்டின் சுகாதாரக் கொள்கைகள் மருத்துவ மற்றும் விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதனைவிடுத்து மத ரீதியான நம்பிக்கைகளால் சுகாதாரக் கொள்கை பாதிக்கப்படக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment