நோயாளிக்கு குளிர்பானத்தில் போதை பொருள் கொண்டு சென்றவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை பார்க்கச்சென்றபோது அவருக்கு குளிர் பானத்துக்குள் மதுபோதையை கலந்து கொண்டு சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நோயளியை பார்க்க சென்ற ஒருவர் மதுபானத்தை குளிர் பானத்துக்குள் கலந்து கொண்டு சென்றுள்ளார். இவரை அவதானித்த வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதனை செய்தபோது மதுபானம் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் சாவகச்சேரி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து சென்ற பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.